உள்ளூர் செய்திகள்

கோவையில் மூதாட்டிக்கு வாந்தி, மயக்கம்

கீரையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மூதாட்டி வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார். வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வால்பாறை,

வால்பாறை அருகே மானாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 62). இவர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம்போல் விஜயலட்சுமி தோட்டத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் காட்டில் இருந்த ஒருவகை கீரையை பிடுங்கி விட்டு, வீட்டிற்கு கொண்டு வந்து சமைத்து சாப்பிட்டார்.

கீரையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து, மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT