உள்ளூர் செய்திகள்

கட்டிடங்கள், நிலப்பயன் மாற்றத்துக்கு இணையதளத்தில் விண்ணப்பம்

கட்டிடங்கள், நிலப்பயன் மாற்றத்துக்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை கடந்த 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்

தமிழகத்தில் பொதுமக்கள் எளிதாகவும் மற்றும் விரைவாகவும் மனைப்பிரிவு அனுமதி பெறும் வகையில் கடந்த ஜூன் மாதம் ஒற்றை சாளர முறையில் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் ஏராளமானவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெற்று வருகின்றனர்.

அதேபோல் தற்போது கட்டிடங்கள் முழுமைத்திட்ட நிலப்பயன் மாற்றம் மற்றும் விரிவு அபிவிருத்தி திட்ட மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை ஒற்றை சாளர முறையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சரிபார்ப்பு படிவத்தின்படி, ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பம் செய்து எளிதாக ஒப்புதல் பெறலாம் என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT