உள்ளூர் செய்திகள்

உலக புத்தக தினவிழா

பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா பள்ளியில் உலக புத்தக தினவிழா நடந்தது. தாம் படித்த புத்தகங்கள், அதன் மூலம் கற்றுக்கொண்ட கருத்துக்களை சக மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

மாலை மலர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் உலக புத்தக நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி குழுமத் தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா மற்றும் ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணவர்கள் பள்ளி நூலகம் சென்று தமக்குப்பிடித்த நாளிதழ், பிரபல எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள், அறிவியல் சார்ந்த புத்தகங்கள், உலக அதிசயங்கள் குறித்த புத்தகங்கை படித்தனர்.

தாம் படித்த புத்தகங்கள், அதன் மூலம் கற்றுக்கொண்ட கருத்துக்களை சக மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.