உள்ளூர் செய்திகள்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ரூ.18 ஆயிரத்து 700-ஐ ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கினர்.

மாலை மலர்

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பாக வெம்பக்கோட்டையில் உள்ள சிபியோ ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், செஸ் போன்ற விளையாட்டு உபகரணங்களும், இல்லத்திற்கு தேவையான உபயோக பொருட்களும் வழங்கப்பட்டது.

இதில் துறை தலைவர் பெமினா, உதவி பேராசிரியர்கள் வைரமுத்து, மதுமதி மற்றும் 48 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து குழந்தைகளுக்கு மத்திய உணவு வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஆங்கித்துறை மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் ரூ.18 ஆயிரத்து 700-ஐ ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கினர்.