உள்ளூர் செய்திகள்

விருதுநகர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாதனை

3,100 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் விருதுநகர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாதனை படைத்தார். விருதுநகர் திரும்பிய அவருக்கு பல்வேறு தரப்பினர் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

விருதுநகர்

விருதுநகர் முத்து தெருவை சேர்ந்தவர் சண்முகமூர்த்தி-ருக்குமணி. இவர்களது மகன் வீரமணிகண்டன் (வயது 19). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டுபடித்து வரும் இவர், "தூய்மை இந்தியா" விழிப்புணர்வை வலியுறுத்தி காஷ்மீர் வரை சுமார் 3 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். பல்வேறு மாநிலங்களில் வீரமணிகண்டனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 10-ந்தேதி சைக்கிள் பயணம் மேற்கொண்ட அவர் 21-ந்தேதி காஷ்மீரை சென்றடைந்தார். விருதுநகர் திரும்பிய அவருக்கு பல்வேறு தரப்பினர் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.