விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சக்தீஸ்வரி (வயது 55). இவர்களின் எதிர்ப்பை மீறி மகன் காதல் திருமணம் செய்து கொண்டு தனியே வசிப்பதாக கூறப்படுகிறது. இதனால் சக்தீஸ்வரி மன விரக்தியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான வயல்காட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசுக்கு தெரிவிக்காமல் கணவரும், உறவினர்களும் சேர்ந்து அந்தப் பெண்ணின் பிணத்தை எரித்துள்ளனர். ஆனால் மனைவி மாயமாகி விட்டதாக முருகன் கூறி வந்துள்ளார்.
இதுகுறித்து புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மாரீஸ்வரனுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். போலீசார் முருகன் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.