உள்ளூர் செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் நகை-பணம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் நகை-பணம் திருட்டு போனது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுலோன் காலனியை சேர்ந்தவர் ராசய்யா (வயது 73). குடும்பத்துடன் மதுரைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் வெளி கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த ராசய்யா உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT