கருணாநிதி படத்திற்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
உள்ளூர் செய்திகள்

கருணாநிதி படத்திற்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மரியாதை

ராஜபாளையம் அருகே உள்ள முகவூரில் கருணாநிதி படத்திற்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார். ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலையில் தி.மு.க நிர்வாகிகள் அமைதி ஊர்வலமாக சென்றனர்.

மாலை மலர்

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள முகவூரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

முகவூர் ஊராட்சி, காமராஜர் சிலை முதல் செட்டியார்பட்டி பேரூராட்சி, தெற்கு மாரியம்மன் கோவில் வரை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ராசாஅருண்மொழி, ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலையில் தி.மு.க நிர்வாகிகள் அமைதி ஊர்வலமாக சென்றனர். பின்னர் கருணாநிதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் கருணாநிதி படத்திற்கும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தி.மு.க நிர்வாகிகளுடன் இணைந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கம்புலி அண்ணாவி, ஒன்றிய, நகர, துணை சேர்மன்கள் துரை கற்பகராஜ், கல்பனாகுழந்தைவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.