உள்ளூர் செய்திகள்

கார் மோதி வாலிபர் பலி

கார் மோதி வாலிபர் பலியானார். செல்வகுமார் (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

சிவகாசி இந்திரா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (19). இவர் விருதுநகர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மகேந்திரன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் நிலை தடுமாறி மகேந்திரன் கீழே விழுந்தார்.

எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆமத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த செல்வகுமார் (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT