விருதுநகர்
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகரில் நாளை (26-ந்தேதி) விருதுநகர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் 9 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் கலந்து கொள்பவர்கள் அடையாள அட்டை, அனைத்து கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடு நர்கள் https://forms.gle/TH4R1Djmv8Z7SkpU என்ற கூகுள் பார்மில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்ற வர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது.
இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.