உள்ளூர் செய்திகள்

சுயதொழில் பயிற்சி வகுப்பு

சுயதொழில் பயிற்சி வகுப்பு நடந்தது. திட்ட இயக்குநர்கள் சுகப்பிரியா, தவமணி, விஜயலட்சுமி பங்கேற்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ரோட்டரி கிளப் ஆப் மல்லி, அரைஸ் டிரஸ்ட் சார்பில் பெண்களுக் கான சுயதொழில் பயிற்சி வகுப்பு மல்லியில் நடந்தது. ரோட்டரி தலைவர் சேகர் தலைமை தாங்கினார். டிரஸ்ட் தலைவர்கிருஷ்ண வேணி முன்னிலை வகித்தார்.

ரோட்டரி உதவி ஆளுநர் முத்துராமலிங்ககுமார், முன்னாள் உதவி ஆளுநர் ராஜேஷ் கண்ணன், ரோட்டரி நிர்வாகி ஜெயராம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திட்ட இயக்குநர்கள் சுகப்பிரியா, தவமணி, விஜயலட்சுமி பங்கேற்றனர். ரோட்டரி செயலர் ஜாய்ஸ்மேரி நன்றி கூறினார்.