உள்ளூர் செய்திகள்

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு சியாம் கணேசை தேடி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேலபாலையத்தை சேர்ந்தவர் முத்து லட்சுமி (வயது21). இவர் வத்திரா யிருப்பு போலீசில் புகார் அளித்துள் ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள கார்மெண்டில் வேலை பார்த்து வந்தேன். அப் ேபாது தெற்கு தெருவை சேர்ந்த சியாம் கணேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. தன்னை திருமணம் செய்து கொள்வ தாக ஆசை வார்த்தை கூறி சியாம்கணேஷ் பாலியல் பலாத்காரம் செய்தார்.

தற்போது திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினால் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்ப டையில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் செய்வ தாக கூறி இளம்பெண்ணை கற்பழித்த சியாம் கணேசை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT