உள்ளூர் செய்திகள்

திருமணமான பெண் பலாத்காரம்

சாத்தூரில் திருமணமான பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

விருதுநகர்

சாத்தூர் மன்னா ர்கோட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பெர்சியாள் (வயது 28). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார்.

திருமணமான இவர் கணவ ருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் பெர்சியாளுக்கும், செட்டுடையார்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியதால் பெர்சியாள், கிருஷ்ணகுமாருடன் நெருங்கி பழகினார். இதில் அவர் கர்ப்பமானார். அதன் பின் கிருஷ்ணகுமாரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெர்சியாளுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அந்த குழந்தை இறந்தது.

இதற்கிடையே பெர்சியா ளை பார்க்க வந்த கிருஷ்ணகுமார் தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், மறந்து விடுமாறும் கூறியுள்ளார். இதையடுத்து பெர்சியாள், கிருஷ்ணகுமார் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமாரை தேடி வருகின்றனர்.