உள்ளூர் செய்திகள்

சொத்து பிரச்சினை: விவசாயிக்கு சரமாரி அரிவாள் வெட்டு

ராஜபாளையம் அருகே சொத்து பிரச்சினையில் விவசாயிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் உமாகாந்த் (வயது40). இவரது பெரியப்பா சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது சொத்தை பிரிப்பதில் உமாகாந்த்துக்கும், உறவினர்களுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வந்தது.

சம்பவத்தன்று உமாகான் அதே ஊரில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு வந்த உறவினர்கள் சஞ்சய்குமார், ராஜ்குமார், தவ சத்தியபாமா, அச்சம்மாள் ஆகியோர் உமாகாந்த்திடம் சொத்து பிரச்சினை தொடர்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த சஞ்சய்குமார் தான்கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து உமாகாந்த்தை சரமாரியாக வெட்டினார். ராஜ்குமார் இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது.

இதற்கு தவசத்தியபாமா, அச்சம்மாள் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த உமாகாந்த் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் விசாரணை நடத்தி பெண்கள் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT