உள்ளூர் செய்திகள்

தனியார் பஸ்- கார் மோதல்; எண்ணை வியாபாரி பலி

தனியார் பஸ்- கார் மோதல்; எண்ணை வியாபாரி பலியானார். தென்காசியை சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி ஈஸ்வரன் காலனியை சேர்ந்தவர் கணேசன்(வயது53), எண்ணை வியாபாரியான இவர் பல்வேறு ஊர்களுக்கு காரில் சென்று வியாபாரம் செய்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று கணேசன் சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் வியாபாரம் செய்ய காரில் புறப்பட்டார்.

சிவகாசி-ஸ்ரீவில்லி புத்தூர் ரோட்டில் ஹவுசிங ்போர்டு காலனி பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

இந்த விபத்தில் காரின் இடிபாடுக்குள் சிக்கிய கணேசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து கணேசன் மனைவி காமாட்சி கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை ஓட்டி வந்த தென்காசியை சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.