உள்ளூர் செய்திகள்

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராம மூர்த்தி சிறுமியை திருவிழாவிற்கு அழைத்து சென்றார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள இலங்கிப்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் காதலித்து வந்தனர்.

இந்த நிைலயில் திருவிழாவிற்காக சிறுமி ஊருக்கு வந்தார். ராம மூர்த்தி சிறுமியை திரு விழாவிற்கு அழைத்து சென்றார். அப்போது திருமணம் செய்து கொள்வ தாக ஆசை வார்த்தை கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத் காரம் செய்துள்ளார். பின்னர் பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது சிறுமியின் தாய்க்கு தெரிய வந்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி கடத்தல்

சிவகாசி அருகே உள்ள நதிக்குடியை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது 17 வயது மகளை அதே ஊரை சேர்ந்த முத்து முனியாண்டி என்பவர் கடத்தி சென்றதாக மாரனேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.