உள்ளூர் செய்திகள்

ம.தி.மு.க. அமைப்பு தேர்தல்

ராஜபாளையத்தில் ம.தி.மு.க. அமைப்பு தேர்தல் நடந்தது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

ராஜபாளையம்

விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. அமைப்பு தேர்தல் ராஐபாளையம் திருவள்ளுவர் மன்றத்தில் நடைபெற்றது. ராஜபாளையம் நகரச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் மதியழகன் விருதுநகர் மாவட்ட தேர்தல் அதிகாரி கல்லத்தியானிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

ராஜபாளையம் நகர அவைத்தலைவராக சேது.இன்பமணி, பொருளாளராக பிச்சைக்கனி, துணைச்செயலாளர்களாக அக்பர் அலி, லிங்கம், பூபதி மற்றும் மாவட்ட பிரதிநிதிகளாக புஷ்பவேல், ஞானசேகரன், குருமூர்த்தி ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ரகுராமன், மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் குமரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கம்மாபட்டி ரவிச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர் பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT