உள்ளூர் செய்திகள்

மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு காங்கிரஸ் புதிய பொறுப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலில் மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு காங்கிரஸ் புதிய பொறுப்பு கொடுத்து நியமித்துள்ளது. இவர் ஏற்கனவே கர்நாடக மேலிட பார்வையாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர்

கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமி ட்டி கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு மண்டல பார்வையா ளர்களாக 5 பேரை நியமித்துள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், டாக்டர் செல்வகுமார் ஆகியோரும் அடங்குவர். மாணிக்கம் தாகூர் எம்.பி. ஏற்கனவே கர்நாடக மேலிட பார்வையாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.