ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த ஒரு குழந்தைக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., நகர்மன்றத்தலைவர் பவித்ரா ஷியாம் ராஜா ஆகியோர் தங்கமோதிரம் வழங்கியபோது எடுத்த படம்.   
உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.

ராஜபாளையம்,

முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தென்காசி எம்.பி. தனுஷ்குமார், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் ராஜா ஆகியோர் தங்க மோதிரங்களை அணிவித்தனர்.

மேலும் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களையும் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர்கள் உமா, மாரியப்பன், தி.மு.க. நகர செயலாளர்(தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், துணைத்த லைவர் கல்பனா குழந்தை வேலு, மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பா ளர் ஆனந்த், 42-வது வார்டு கவுன்சிலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து ராஜபாளையம் 42-வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT