ராஜபாளையம்
ராஜபாளையம் மாடசாமி கோவில் ெதருவைச் சேர்ந்தவர் பரமகுரு (வயது 39). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இவரது சகோதரிக்கு திருமண நிச்சயதார்த்த விழா ராஜபாளையம் அருகேயுள்ள சங்கரபாண்டியபுரம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொள்வதற் காக பரமகுரு நேற்று சங்கர பாண்டியபுரம் சென்றிருந் தார். இதற்கிடையே காலையில் திறந்தவெளி கழிப்பி டத்தை நோக்கி உறவினரின் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றார்.
வழியில் வாகைக்குளம் கண்மாய் பகுதியில் புதிய பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கான்கிரீட் கலவை எந்திரம் அங்கு வந்தது.
அப் போது எதிர்பாராதவித மாக பரமகுரு மீது அந்த வாகனம் மோதியது. இதில் லாரியின் டயருக்கு அடியில் சிக்கிக்கொண்ட பரமகுரு உடல் நசுங்கி பலியானார்.
இந்த விபத்து குறித்து பரமகுருவின் பெரியப்பா இருளப்பன் கொடுத்த புகாரின் பேரில் கீழராஜ குலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தியதாக கலவை எந்திரத்தின் டிரைவர் என்.புதூரை சேர்ந்த பொம்முசாமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.