அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து கிடக்கும் காட்சி.  
உள்ளூர் செய்திகள்

டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து;10 பேர் காயம்

டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து;10 பேர் காயமடைந்தனர்.சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாளையம்பட்டி

அருப்புக்கோட்டையில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பஸ் சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தது.அந்த பஸ்சை கிருஷ்ணன் (வயது52) என்பவர் ஓட்டி சென்றார். ஆத்திபட்டி அருகே பஸ் சென்றபோது பஸ்சின் முன்னால் பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று சென்றது.

அப்போது டேங்கர் லாரியின் குறுக்கே திடீரென நாய் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக டேங்கர் லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் பஸ்சின் முன்பகுதி டேங்கர் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. அதில் பயணம் செய்த ஜெயசெல்வி (வயது45), ஜெயந்தி (54), கிருஷ்ணன் (52), அருள்ராஜ் (54), முத்து (40), சரவணன் (43), முருகன் (32) உள்பட 20 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT