உள்ளூர் செய்திகள்

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

திருமண ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைதானார். சிறுமியிடம் பலமுறை உதயகுமார் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகேயுள்ள குமிலாங்குலம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 19). இவர் அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து வந்ததாக கூறப் படுகிறது.மேலும் அந்த சிறுமியிடம் பலமுறை உதயகுமார் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். அதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து நரிகுடி போலீசாருக்கு தகவல்த ந்த அதன் அடிப்படையில் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய உதயகுமாரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர்.

அதில் அந்த சிறுமியை காதலித்து வந்ததும், திருமண ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்ததும் தெரியவந்தது.இதனையடுத்து நரிகுடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் உதயகுமாரை கைது செய்தனர்.