உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடை உரிமையாளர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். 130 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தன

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள ஈஞ்சார் மேற்கு தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 58). இவர் ஈஞ்சார் விலக்கு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

அந்தப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் இவரது கடையில் சோதனை செய்தனர். அப்போது 137 பாக்கெட்டுகள் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

அங்கிருந்து புகையிலை பாக்கெட்டுகள், ரூ.5 ஆயிரத்து 300-யை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

சிவகாசி அருகேயுள்ள முருகையாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சிவகாசி-விஸ்வநத்தம் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் போலீசார் சோதனையிட்டபோது, 130 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.