உள்ளூர் செய்திகள்

நூற்பு ஆலையில் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் மீது சரமாரி தாக்குதல்

நூற்பு ஆலையில் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். தனியார் நூற்பு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

மாலை மலர்

விருதுநகர்

விருதுநகர் பகுதியில் உள்ள தனியார் நூற்பு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காக அவர்கள் அருகில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். தொழிலாளர்கள் ஜித்தேத்தி ரகுமார், நீரஜ்குமார் ஆகியோரிடம், சின்ன பேராளியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஹெட்போனை பறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் பாலமுருகன் உள்பட 6 பேர் சம்பவத்தன்று நூற்பு ஆலையில் புகுந்து அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த நீரஜ்குமார், பூசன், சஞ்சய், கோல்குமார், அனில்குமார், ராகுல் உள்பட 10-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மில் மேலாளர் முருகேசன், பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் உள்பட 6 பேரை தேடி வருகின்றனர்.