உள்ளூர் செய்திகள்

மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர்

மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபரை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்போது சந்தனமாரியப்பன் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மாலை மலர்

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள வடகரை நயினாபுரம் காலனியை சேர்ந்தவர் சுடர்கொடி(வயது23). இவருக்கும் செந்தட்டி யாபுரத்தை சேர்ந்த சந்தனமாரியப்பன்(26) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மகன் உள்ளான். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சுடர்கொடி தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், கடந்த 2019-ம் ஆண்டு எனது கணவர் கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதோடு என்னையும், குழந்தையையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் வேலுசாமி- லட்சுமி இருந்தனர்.

இதையடுத்து நான் எனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டேன். சம்பவத்தன்று திரும ணத்தின் போது எனக்கு அணிவித்த நகையை கேட்க சென்றேன். அப்போது சந்தனமாரியப்பன் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவர் எனக்கு தெரியாமல் அவர் 2-வது திருமணம் செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் விசாரணை நடத்தி சந்தனமாரியப்பன், அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.