உள்ளூர் செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி தற்கொலை

சாத்தூர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் எல்லப்பராஜ் (வயது 76). இவர் சாத்தூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தாலுகா குழு தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக அவருக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவரிடம் காண்பித்தும் குணமாகவில்லை.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த எல்லப்பராஜ் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷ மாத்திரைகளை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி எல்லப்பராஜ் பரிதாபமாக இருந்தார்.

இது குறித்து பெத்துராஜ் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.