விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சமூக விரிவாக்க நல அலுவலர் ராஜேஸ்வரி. குழந்தை திருமணம் தொடர் பாக இவருக்கு புகார் வந்தது. இதுகுறித்து அவர் விசாரணை நடத்தினார்.அப்போது விருதுநகர் அருகே உள்ள ஒரு கிரா மத்தை சேர்ந்த சிறுமிக்கும், செங்கமலப்பட்டியை சேர்ந்த முனியசாமி என்பவ ருக்கும் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு உறவினர் முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சட்ட விரோதமாக திருமணம் நடந்தது தெரியவந்தது.
இதற்கு முனியசாமியின் பெற்றோர் கருப்பசாமி, செல்லத்தாய், உறவினர் மற்றொரு கருப்பசாமி ஆகி யோர் உடந்தையாக இருந்து உள்ளனர். இதுகுறித்து சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி முனியசாமி உள்பட 4 பேர் மீதும் குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.