உள்ளூர் செய்திகள்

ஊரணியில் மூழ்கிய கார்; உயிர் தப்பிய வியாபாரி

ஊரணியில் கார் மூழ்கியதில் வியாபாரி உயிர் தப்பினார். காரில் சிக்கியிருந்த ஜான்பாலை மீட்டனர்.

விருதுநகர்

விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்தவர் ஜான்பால். வியாபாரியான இவர் வெளியூர் சென்று விட்டு காரில் ஊருக்கு வந்திருந்தார். சொக்கம்பட்டி விலக்கு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது காரின் முன் டயர் வெடித்தது.

இதில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோர ஊரணியில் விழுந்து மூழ்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனே ஊரணியில் இறங்கி காரில் சிக்கியிருந்த ஜான்பாலை மீட்டனர்.

மயங்கிய நிலையில் கிடந்த அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT