விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வி.ஏ.30 விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கங்கள், நகர வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் மூலம் தொடக்க நிகழ்வாக 8 பேருக்கு ரூ.80 லட்சத்து 30 ஆயிரம் முதல் கடன் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர்-மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, அருப்புக்கோட்டை சரக துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், விருதுநகர் நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மாரியப்பன் ஆகியோர் உறுப்பினர்களுக்கு கடனுதவி காசோலைகளை வழங்கினர்.
அப்போது சங்கத்தின் தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.