உள்ளூர் செய்திகள்

இளம்பெண் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு

இளம்பெண் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மது குடித்த பூமிநாதன் தகராறு செய்து மனைவியை அரிவாளால் வெட்டினார்.

விருதுநகர்

திருச்சுழி அருகே உள்ள உழுத்திமலையை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகள் கற்பகமும், சிவகங்கை மேலபசலையை சேர்ந்த பூமிநாதனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று கற்பகம் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்திருந்தாள்.

அங்கு மது குடித்த பூமிநாதன் தகராறு செய்து மனைவியை அரிவாளால் வெட்டினார். இதை தடுக்க வந்த அவரது பெற்றோர் பாக்கியம்-காமாட்சிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. 3பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமிநாதனை கைது செய்தனர்.