மாணவன் சாவு 
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பரிதாபமாக இறந்தான்.

மாலை மலர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் வேல்முருகன் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது  மகன் சுகுமார் (10). இவர் அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்தார். 

நேற்று காலை இவர் இயற்கை உபாதையை கழிக்க வாலாங்குளம் கண்மாய் பகுதிக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் இந்த சிறுவன் வாலாங்குளம் கண்மாய் அருகே உள்ள  கிணற்று அருகே சென்றதாக கூறியதையடுத்து சந்தேகத்தின் பேரில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தீயணைப்புத்துறை அலுவலர்களான சுந்தர குருசாமி, அந்தோணி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் பேரில் உடனடியாக அந்தப்பகுதிக்கு சென்று தீயணைப்பு துறையி னர் இரவில் தேடினர்.   கண்மாய் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்த மாணவன் சுகுமாரின் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.