வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணவாய்பட்டி ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.
முதியோர் உதவித்தொகை 60 நபர்களுக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி முருகன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் அன்பு என்ற மருதை, கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி, பற்றாளராக இளநிலை உதவியாளர் ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர். தீர்மானங்களை ஊராட்சி செயலர் முத்துக்குமார் வாசித்தார். இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.