பாமனி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. 
உள்ளூர் செய்திகள்

பாமணி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

பாமனி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி வட்டம் பாமனி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது .

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய குழு உறுப்பினர்கள் வார்டு உறுப்பினர்கள் முருகதாஸ், இந்துமதி, பிரமிளா, பத்மா ,ஜெயலெட்சுமி, ஜெயந்தி, மதுமதி, சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைமை ஆசிரியர் கிரிஜா, கிராம அலுவலர் மணிகண்டன், கோசி மணி மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஊராட்சி செயலர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT