உள்ளூர் செய்திகள்

விஜயமங்கலம் சசூரி கல்லூரியில் கலைப்போட்டிகள் - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

சசூரி நிறுவனங்களுக்கு இடையேயான மாணவர்களுக்கு கலைப் போட்டிகள் நடைபெற்றது.மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.

திருப்பூர் :

திருப்பூர் விஜயமங்கலம் சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சசூரி நிறுவனங்கள் மற்றும் அடையாறு புற்றுநோய் நிறுவனம் சார்பில் சிரிஸ்டா-2023 கலைப்போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் பல்வேறு பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கலைப்போட்டிகள், இரண்டாம் நாள் கல்லூரிக்கு இடையேயான மாணவர்களுக்கு கலைப்போட்டிகள் மற்றும் மூன்றாம் நாள் சசூரி நிறுவனங்களுக்கு இடையேயான மாணவர்களுக்கு கலைப்போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சசூரி நிறுவனத்தின் தாளாளர் கந்தசுவாமி தலைமை தாங்கினார்.கல்லூரியின் செயலாளர் சவிதா மோகன்ராஜ் விழாவை தொடங்கி வைத்தார் . சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராம்குமார் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் தர்ஷன், மணிமேகலை, நடிகை காயத்ரி சங்கர், ஸ்ருதிகா, அருண் அரவிந்த் மற்றும் விஜய் விருஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் குழுநடனம் , தனிநபர் நடனம்,மௌனப்படம், புகைப்படம் எடுத்தல், காய்கறி செதுக்குதல், நகக்கலை, குறும்படம், மெஹந்தி உள்பட பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் தங்கள் பன்முகத்திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களால் பரிசு வழங்கப்பட்டது. முடிவில் நைருதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அன்பரசு நன்றி கூறினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.