உள்ளூர் செய்திகள்

ஹோலி ஏஞ்சல்ஸ் பி.சி.வி. சர்வதேச பள்ளி ஆண்டு விழாவில் விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு: மாணவ- மாணவிகளுக்கு அறிவுரை

மாணவர்கள் நமது தேசத்தலைவர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.அவர்களது தியாகங்கள் நாட்டுக்கு அவர்கள் செய்த பங்களிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே கௌசால்யபுரம் பகுதியில் அமைந்துள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பி.சி.வி சர்வதேச பள்ளியில் (Holy Angels BCV International School) 2026-ம் ஆண்டு விழா ''சிற்பிகா 26'' என்ற பெயரில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கலந்து கொண்டு பள்ளியில் சிறந்து விளங்கிய மாணவிக்கு பொன்னாடை அணிவித்து விருதினை வழங்கி சிறப்புரையாற்றினர்.

அப்போது விஜய் வசந்த் எம்.பி. பேசியதாவது:-

தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவ- மாணவிகள் இருக்க வேண்டும். அதை போல் மொபைல் போனை அவசியத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதனை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று மாணவ- மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாணவர்கள் நமது தேசத்தலைவர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது தியாகங்கள் நாட்டுக்கு அவர்கள் செய்த பங்களிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை போல் நாமும் இந்த சமுகத்திற்கு தனது பங்களிப்பை செலுத்த வேண்டும். நமது தாய், தந்தைக்கு மரியாதை அளிக்க வேண்டும் என பேசினார்.

படிப்பு மட்டும் இல்லாமல் விளையாட்டு, நடனம் மற்றும் உங்களது திறமைகளை அறிந்து அதை வெளி கொணர வேண்டும். தாய், தந்தையர்களும் உங்களது குழந்தைகளின் திறமைகளை அறிந்து வெளி கொண்டு வர உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு விஜய் வசந்த் எம்.பி. பேசினார்.

நிகழ்ச்சியில் குழந்தைகளின் கண்கவர் நடனம் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.