உள்ளூர் செய்திகள்

வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி ஆண்டு வெள்ளிவிழா ஓய்வு நீதிபதி பங்கேற்பு

பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த கொக்கு மேடு வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 25 ம் ஆண்டை முன்னிட்டு வெள்ளி விழாவாக பள்ளியின் முதல்வர் ஹேமாமாலினி தலைமையில் கொண்டாடபட்டது.

சிபிஎஸ்இ மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிபிஎஸ்இ பள்ளியின் சின்னம் வெளியிட்டார். குருநானாக் கல்லூரி முதல்வர் ரகுநாதனன் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளி துணை முதல்வர் தனலட்சுமி அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் துர்கா நன்றியுரை ஆற்றினார். விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்

SCROLL FOR NEXT