உள்ளூர் செய்திகள்

பள்ளிகொண்டாவில் பைக் திருடிய வாலிபர் கைது

பைக்குகளை பறிமுதல் செய்யப்பட்டதுஜெயிலில் அடைத்தனர்

அணைக்கட்டு:

பள்ளிகொண்டா கேம்ரான்பேட்டை, கஸ்தூரி பாய் தெருவை சேர்ந்தவர் மதன் (வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது பைக் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து பள்ளிகொண்டா போலீசில் மதன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று சந்தேகத்தின் பேரில் பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் ஆலங்காயம் அடுத்த வெள்ளக்குட்டையை சேர்ந்த கிரிபிரசாந்த் (23) என்பதும் பள்ளிகொண்டா பகுதியில் மதனின் பைக்கை திருடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து, போலீசார் கிரிபிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT