வேலூரில் உறியடி விழா நடந்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

வேலூரில் உறியடி விழா

புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி நடந்ததுஏராளமானோர் கலந்து கொண்டனர்

மாலை மலர்

வேலுார்:

புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி நேற்று மாலை வேலூர் ரங்காபுரத்தில் உறியடி மற்றும் சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது .

ரங்காபுரம் கோதண்ட ராமர் கோயில் எதிரே நடந்த சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில், போட்டியிட்ட அணிகளில் , காகி தப்பட்டறை அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து வாணவேடிக்கையுடன் ஸ்ரீ கிருஷ்ணர் வீதி உலா நடந்தது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.