உள்ளூர் செய்திகள்

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைப்பு

புயல் மழை எச்சரிக்கை காரணமாக நடவடிக்கை தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்

வேலூர்:

வேலூர், திருவண்ணா மலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மாண்டஸ் புயல் காரணமாக மிக கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த மாவட்ட ங்களில் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளுவர் பல்கலைகழக கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் இன்று மற்றும் நாளை நடைபெறும் பருவ தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) விஜயராகவன் தெரிவித்துள்ளார்.