உள்ளூர் செய்திகள்

டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து ஒருவர் பலி

நிலத்தை உழுது கொண்டிருந்த போது பரிதாபம் போலீசார் விசாரணை

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை மலை கிராமம் ஊராட்சிக்கு உட்பட்ட தேந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் கிருஷ்ணன் (33), இவர் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை தேந்தூர் பகுதியில் விவசாய நிலத்தை டிராக்டரில் உழுது கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கிருஷ்ணன் டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், விபத்தில் சிக்கிய அவரை மீட்டனர். ஆனால் அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்

இதுகுறித்து, தகவலறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT