வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

வேலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைதை கண்டித்து நடந்தது ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலூர்:

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மாநகர மாவட்ட அதிமுக சார்பில் இன்று திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டம்

மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார் துணை செயலாளர்கள் ஜெயபிரகாஷ், உமா விஜயகுமார், தாஸ், வக்கீல் பி.எஸ்‌.பழனி, காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ், பகுதி செயலாளர்கள் நாகு, ஏ.ஜி பாண்டியன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சரவணன், எழில், வன்றந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிமுக இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டனர்.

அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றி அமைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

அதிமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டத்தால் அண்ணா சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT