நடுரோட்டில் அமர்ந்து மதுகுடித்தவரை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

நடுரோட்டில் அமர்ந்து மது குடித்த மேஸ்திரி கைது

கே.வி.குப்பம் பஸ் நிலையம் அருகே அட்டகாசம்போலீசார் விசாரணை

கே.வி.குப்பம்:

கே.வி.குப்பம் பஸ் நிலையம் பகுதியில் குடிபோதையில் தள்ளாடியபடி கையில் மது பாட்டிலுடன் வந்த ஒருவர் குடி யாத்தம் காட் பாடி தேசிய நெடுஞ்சாலையில் நடுரோட்டில் அமர்ந்தார்.

பின் னர் தான் கொண்டு வந்த மது பாட்டிலை திறந்து அதை 3 முறை தொட்டுத் தொட்டு கும்பிட்டார்.

தொடர்ந்து அங்கேயே மதுவை டம்ளரில் ஊற்றி குடித்தார். இதை ரோட்டில் சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.

இது சமூக வலைதளங் களில் வைரலானது. தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடுரோட்டை பாராக மாற்றி போக்குவரத்துக்கு இடையூறாக அமர்ந்து மது அருந்திய நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கே.வி. குப்பம் சீதாராம்பேட்டை பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி செல்வம் (வயது 64) என்பது தெரிந்தது.

அவர் மீது கே.வி. குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.