உள்ளூர் செய்திகள்

நர்சிங் கல்லூரி மாணவி மாயம்

பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

வேலூர்:

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் திருப்பதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்ப வில்லை.

சிறுமியை அவர்கள் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து குடியாத்தம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT