உள்ளூர் செய்திகள்

வேலூரில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

300-பேர் கலந்துக கொண்டனர் கள்ளசாராய மரணத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்

மாலை மலர்

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி, மாவட்ட மகளிர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மகளிர் அணி தலைவி செல்வி தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர்.மனோகரன் முன்னிலை வகித்தார். கார்த்தியாயினி கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் பாபு, ஜெகன் நாதன், மகளிர் அணி பொதுச் செயலாளர் கீதா,மஞ்சு, ஷகிலா, மகளிர் அணி துணை தலைவர்கள் மலர்க்கொடி. மகளிர் அணி செயலாளர்கள் ஜோதி, சுதா, ராதா, பிரியா,மாநில செயற்குழு சாந்தி, மாநில வணிக பிரிவு செயலாளர் இளங்கோ, தேசிய பொதுகுழு பிச்சாண்டி, அரசு தொடர்பு தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் ஜெகன், 2-வது மண்டல தலைவர் கோபி மற்றும் சுமார் 300-பேர் கலந்துக கொண்டனர்.

கள்ளசாராய மரணத்துக்கு காரணமானதாக தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.