உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கே.வி.குப்பம்:

கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் உள்ள குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் எதிரில் அங்கன்வாடி பணியா ளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார தலைவர் விஜயநிர்மலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கள் ஜூலி, உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் சத்யா வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில், 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களை பிரதான மையங்களோடு இணைக்கக்கூடாது. கியாஸ் சிலிண்டருக்கான முழு தொகையை வழங்க வேண்டும்.

10 ஆண்டுகள் நிறைவு செய்த பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு உண்டான மின் கட்டணத்தை அரசே வழங்க வேண்டும்.

வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.