உள்ளூர் செய்திகள்

ஆந்திராவுக்கு கடத்திய 3.7 டன் ரேசன் அரிசி பறிமுதல்

அதிகாரிகள் சோதனையில் சிக்கியது போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தப்பள்ளி சோதனை சாவடி வழியாக ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது.

இந்த நிலையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. நந்தகுமார், இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையிலான போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது மினி வேனில் ஆந்திராவுக்கு கடத்தி வரப்பட்ட 3.7 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

அதை கடத்தி வந்த பேரணாம்பட்டை சேர்ந்த பாஷா (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

பேரணாம்பட்டு பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக ரேசன் அரிசியை சேகரித்து லாரியில் ஆந்திராவுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.