உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் செயின் பறித்த 2 வாலிபர்கள் கைது

போலீசார் ரோந்துயின்போது சிக்கினர்பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளதாக தகவல்

வேலூர்:

வேலூர் அடுத்த செதுவாலையை சேர்ந்தவர் ஜானகி (வயது 42). இவர் தனியார் ஷூ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை இவர் வல்லண்டராமம் கூட்ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை 2 பேர் பைக்கில் பின் தொடர்ந்தனர். யாரும் இல்லாதபோது திடீரென அவர் கள் ஜானகியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நகையை கழற்றி கொடுக்கு மாறு கூறினர்.

அதிர்ச்சி அடைந்த அவர் மறுக்கவே அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து ஜானகி விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து விரிஞ்சிபுரம் போலீசார் ரோந்து சென்ற போது 2 வாலிபர்கள் சந்தே கத்துக்கு இடமளிக்கும் வகை யில் பைக்கில் வந்தனர்.

அவர்களை போலீ சார் மடக்கி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித் தனர்.

அதில் அவர்கள் விரிஞ் சிபுரம் பகுதியை சேர்ந்த சுதா கர் (29), அஜித் (21) என்பதும், அவர்கள் ஜானகியிடம் செயினை பறித்ததும் தெரிய வந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து, பைக்கையும், செயினையும் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.