மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி 7-ம் அணி போலீஸ் படை ஐ.பி.எஸ். (தளவாய்) ஜெயந்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
போச்சம்பள்ளியில் 7ம் அணி காவலர் படை செயல்பட்டு வருகிறது இங்கு பயன் படுத்தப்பட்ட கழிவு செய்யப்பட்ட 8 காவல் வாகனங்களை எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 12-ந் தேதி காலை 12 மணியளவில் 7-ம் அணி காவல் படை தலைமை அலுவலகத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது.
மேலும் ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் வருகிற 11-ந் தேதி தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7-ம் அணி வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள். அன்றே 6 சக்கர வாகனத்திற்கு ரூ.3 ஆயிரமும், 4 சக்கர வாகனத்திறகு ரூ.2 ஆயிரமும் முன் பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏலம் எடுத்தவுடன் முழு தொகை மற்றும் அதற்கு உண்டான ஜி.எஸ்.டி. முழுவதையும் அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறிஉள்ளார்