கோப்பு படம். 
உள்ளூர் செய்திகள்

தேவதானப்பட்டி அருகே வாகனம் மோதி புரோட்டா மாஸ்டர் பலி

காட்ேராடு அருகே கொடைக்கானல் செல்லும் சாலையில் நடந்து சென்ற போது வாகனம் மோதியது.சம்பவ இடத்திலேயே பலியானார்.

மாலை மலர்

தேனி:

தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(57). இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலைபார்த்து வந்தார்.

சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முத்துப்பாண்டி காட்ேராடு அருகே கொடைக்கானல் செல்லும் சாலையில் நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த

அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்தபுகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.