விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகரில் புதுவை-விழுப்புரம் சாலையில் வணிக வளாகத்தில்அமைந்துள்ள3 திரையரங்குகளிலும், கே.கே ரோட்டில் அமைந்துள்ள ஒரு திரையரங்கிலும்,ரங்கநாதன் சாலையில் அமைந்துள்ள 2 திரையரங்குகளிலும் நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் வெளியிடப்பட்டது.
விழுப்புரம் நகரில் வெளியிடப்பட்ட வலிமை படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் கடும் குளிரிலும்,ஆண் பெண் என்று வேறுபாடு இல்லாமல் இளைஞர்கள் அதிகாலை 3 மணிக்கே திரையரங்குகளுக்கு முன்பாக குவிந்தனர்.தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் பட்டாசுகளை வெடித்தும் ரசிகர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்கள்.
நடிகர் அஜித்குமார் 1993 -ம் ஆண்டுதமிழில் அமராவதி என்ற திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கி தற்போது 29 ஆண்டுகள் ஆகிறது.வலிமை அவரது 60 வது படமாகும். கடந்த 2 ஆண்டுகளாக அவர் நடித்த திரைப்படங்கள் வெளியாகவில்லை.
இப்படம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாகும். இந்த படத்தை பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளிவந்த ரசிகர்கள் கூறுகையில் சண்டைக்காட்சிகள் அற்புதம் தலைக்கு நிகர் தலைதான். இளைஞர் களை நல்வழிப்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் இருந்தது என்றனர்.